சென்னை: உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது. வேண்டுமெனில் கால்வாய் சீரமைத்து தரப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்த தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தார்.
சோமரசம்பேட்டை அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் 2 சிறிய தடுப்பணை கோரிய எம்.எல்.ஏ. பழனி பாண்டிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது. வேண்டுமெனில் கால்வாய் சீரமைத்து தரப்படும் என்று கூறினார்.