புதுடில்லி: டில்லி சட்டப்பேரவை தேர்தலில் கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு அடித்தது ஜாக்பாட். எப்படி தெரியுங்களா? துணை முதல்வர் பதவியாகத்தான்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் ஷர்மாவுக்கு, துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளது பாஜக. புது டெல்லி தொகுதியில் 2013, 2015, 2020 என 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலை, வெறும் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் பர்வேஷ் தோற்கடித்தார்.
இதற்கு முன் 2015, 2019 மக்களவைத் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. இப்போ சொல்லுங்க இது ஜாக்பாட்தான்.