சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் பதவியேற்பார் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம், அதிமுகவைச் சேர்ந்த தனபால் மற்றும் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக எம்.பி.க்கள் 3 பேரும் ஜூலை 25-ம் தேதி பதவியேற்க உள்ளனர். இதற்கிடையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.