அமெரிக்கா: என் போராட்டம் எதை நோக்கி… அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக போராடப் போகிறேன் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக போராடப் போவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக இருப்பேன் என உறுதி அளித்தார்.
மக்கள் என்னை எப்போதும் நம்பலாம் என்று தெரிவித்த அவர், கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் மற்றும் சிக்கல்களில் இருந்து நாடு விரைவில் விடுபடும் எனத் தெரிவித்தார். பொறுப்பற்ற மனிதரான டிரம்ப், அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.