அமெரிக்கா: கமலா ஹாரிகஸ் கண்டனம்… ஹமாசுக்கு ஆதரவான போராட்டம் நடத்தி அமெரிக்க தேசியக் கொடி எரிக்கப்பட்டதற்கு கமலா ஹாரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொடூர தீவிரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலை அழிக்க சூளுரைத்து தாக்குதல் நடத்தும் நிலையில் அந்த அமைப்பிற்கு ஆதரவான பதாகைகளுடன் நடந்த போராட்டத்தில் அமெரிக்க தேசியக் கொடி எரிக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை தாம் ஆதரிப்பதாகவும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.