அமெரிக்கா: அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரீஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனுக்கு பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளராக அறிவிக்க போதிய வாக்குகளைப் பெற்றுள்ள கமலா ஹாரீஸ், அடுத்த வாரத்தில் முறைப்படி தாம் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தம்மை தேர்வு செய்த கட்சி நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோபைடன் கமலா ஹாரீசின் பெயரை பரிந்துரை செய்திருந்தார்.