சென்னை: 10 நாட்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாராகும் என்று எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமையாக தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்படும் என்று எம்.பி.யும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.