டெல்லி: மீனவர்கள் பிரச்சனையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் 530 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை சிறையில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழகத்தைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளன. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.