சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா-இலங்கை எல்லை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி கச்சத்தீவு இந்திய அரசிற்கோ, தமிழக அரசிற்கோ சொந்தமில்லை, 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள்? என்று இபிஎஸ் கேட்டுள்ளார். யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல; மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கம்.

தேர்தலுக்கு தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக அல்ல. பிரதமர் மோடி இலங்கை செல்வதால் கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்தோம். கச்சத்தீவை மீட்க அதிமுக எடுத்த நடவடிக்கை என்ன? ஒரு மாநிலம், மற்றொரு நாட்டுக்கு சொந்தமான நிலத்தை, மற்றொரு நாட்டுக்கு வழங்கும் போது, அந்த மாநிலத்திடம் கேட்டு, பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரியவில்லை. சுத்தசேவு விவகாரத்தில் மாநில அரசின் சம்மதமும் பெறப்படவில்லை. தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை கொடுத்தது தவறு. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது, இது தமிழக மக்களுக்கு இழப்பு, கச்சத்தீவை மீட்க அனைவரும் பாடுபட வேண்டும்,” என்றார்.