புதுடில்லி: மம்தா மைக் ஆப் செய்யப்படவில்லை என்று நிதி ஆயோக் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது தவறு என நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மம்தாவின் மைக் அட்ஜஸ்ட் செய்யப்பட்டதை அவர் தவறாகப் புரிந்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஒவ்வொரு முதலமைச்சருக்கும் 7 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், நேரம் முடிவடையும் போது மேஜையில் இருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மம்தா புறப்பட்டுச் சென்ற பிறகும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சுப்ரமணியம் தெரிவித்தார்.