மேற்கு வங்கம் : நிரூபியுங்கள்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முதல்வர் மம்தா சவால் விடுத்துள்ளார்.
வங்கதேச நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால், மேற்குவங்க மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
தன்னை எதிர்கொள்ள பாஜகவினருக்கு தைரியம் இல்லை என விமர்சித்த அவர், அதனால் தான் முஸ்லிம் லீக் அமைப்பில் நான் உறுப்பினராக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக சாடினார்.