தஞ்சாவூர்: தஞ்சாவூரில் முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த முரசொலி மாறன் நினைவு நாள் , உயர்கல்வித்துறை அமைச்சர்
கோவி.செழியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்