விழுப்புரம் : மும்மொழிக் கொள்கையை புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்
விழுப்புரத்தில் முதல்வர் மருந்தகங்களை தொடக்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி. இதையடுத்து, மும்மொழிக் கொள்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்.
இதை யாராலும் அசைக்க முடியாது. இங்கு மும்மொழிக் கொள்கையை புகுத்த முடியாது” என கூறினார்.