சென்னை: “பேரிடர்களின் போது புயலால் மின்கம்பங்கள் சேதமடைவதால், வானூர் தொகுதியில் மேல்நிலை கம்பிகள் புதையுண்ட கம்பிகளாக மாற்றப்படுமா? என தமிழக சட்டப்பேரவையில் வானூர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகளை புதை கம்பிகளாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.

நகராட்சி, பேரூராட்சி மூலம் தேவைப்படும் இடங்களில் படிப்படியாக மின்கம்பிகள் பொருத்தப்படும். தேவைப்பட்டால் வானூர் தொகுதிகளிலும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.