விழுப்புரம்: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் 3-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நேற்றைய மாநாட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடன் வந்த கட்சியினர் உடனடியாக அவரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னை மத்திய மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் செல்வாவுக்கும் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.