சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக இருந்த சிவ் தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து முதலமைச்சரின் தனி செயலாளர்களில் முதன்மை செயலாளராக முருகானந்தம் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2001-2004ஆம் ஆண்டு காலத்தில் கோவை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார் முருகானந்தம். ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலர், தொழிற்துறை, நிதித்துறைச் செயலாளர் பொறுப்புகளிலும் முருகானந்தம் பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.