சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:- சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் பலமுறை விவாதம் நடந்துள்ளது. சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டமன்றத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசு சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமா? மாநிலங்களில் ஆளும் அரசு அதை நடத்த வேண்டுமா என்ற வாதங்களும் எழுந்தன. அதன் பிறகு, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில், மத்திய அமைச்சரவை இப்போது சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக கூட்டணியில் மற்ற கட்சிகள் இணைகின்றனவா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதேபோல், விஜய் கட்சியை பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் சேர்ப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால், இதைப் பற்றி அப்போது பார்க்கலாம். விஜய் கட்சி மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சி நிகழ்வுகளுக்கும் தமிழக அரசு தடை விதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.