எடப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:-
தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. சேலம் மாவட்டம், எட்டப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, கிராம காங்கிரஸ் கமிட்டி துவக்க கூட்டம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கிராம கமிட்டிகள் அமைக்க உள்ளோம். நவம்பர் 5-ம் தேதி தொடங்கும் பணி டிசம்பர் 5-ம் தேதி முடிவடையும். சோனியா காந்தி பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதி கன்னியாகுமரியில் கிராம தரிசனம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஜனவரியில் பூத் கமிட்டி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. காமராஜரின் கருத்துகளையும், அவரையும் யார் வேண்டுமானாலும் உதாரணமாகக் கொள்ளலாம். காமராஜரை சொந்தமாக்கும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.