சென்னை: கொளப்பாக்கத்தை அடுத்த போரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி, பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி 800 கிலோ சிறுதானியங்களைக் கொண்டு 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை 12 மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை படைத்தார்.
இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்த நாட்டுக்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய குழு அமைத்து கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையை அளித்தனர். தமிழன் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.
இது ஒரு பெரிய நாடு, யார் வேண்டுமானாலும் ஆளலாம். நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். விஜய் அரசியலில் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு தலைவரால்தான் அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். விஜய் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று ‘ரோஜா தினமாக’ அனுசரிக்கப்படுகிறது.
இன்று ‘ரே ஆஃப் லைட்’ குழந்தைகளை நேரில் சந்தித்தேன். அறக்கட்டளை, இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் பின்தங்கிய குழந்தைகளை அடையாளம் கண்டு முழுமையான சிகிச்சையை வழங்குகிறது.
காஞ்சி காமகோடி அறக்கட்டளையின் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தோம். இக்குழந்தைகள் அனைவரும் சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைந்து சமூகப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
புற்று நோயற்ற சமுதாயத்தை உருவாக்க, பாகுபாடின்றி ஒன்றிணைவோம்,” என்றார். மற்றொரு பதிவில், “செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி, ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று, முதல்முறையாக தங்கப் பதக்கத்தை வென்று பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
ஸ்ரீநாத் நாராயணன் தலைமையிலான இந்திய அணி வீரர்கள், தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
அறிவுசார் திறன். பிரக்ஞானந்தா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், அர்ஜுன் எரிகேசி, விதித் குஜ்ராத்தி மற்றும் பெண்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த தங்கப் பதக்கத்தை வென்று இந்திய மக்களைப் பெருமைப்படுத்தியுள்ளனர். எல்.முருகன் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.