சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. தினமும் பல கொலைகள் நடப்பதைப் பார்க்கும்போது தமிழகம் வன்முறையாளர்களின் புகலிடமாக மாறியிருப்பதையே காட்டுகிறது. இதே நிலை நீடித்தால், வன்முறையில் முன்னணி மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகத்திற்கு திமுக அரசு ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழகத்தையே குழப்பமான நிலைக்கு மாற்றியுள்ள திமுக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் இருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றவும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.