நாமக்கல்: இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணம் அக்டோபர் 4, 5-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், நேற்று ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளிலும், இன்று நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் மக்களிடையே உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 4 மற்றும் 5-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.