சென்னை: சட்டப் பேரவையில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சட்டப் பேரவையில் விதி எண் 56-ன்படி, அவையை விவாதத்திற்கு ஒத்திவைக்கும் தீர்மானம் கொடுத்துள்ளோம். இதற்காக, எங்கள் கட்சி கொறடா, பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். நேற்று சட்டப் பேரவையில், விதிகளின்படி நடந்து கொண்டால், சட்டப் பேரவையில் பேச அனுமதிப்போம் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால் இன்று அவர் விதிப்படி நடக்கவில்லை. பேரவைத் தலைவர் நடுநிலை வகிக்கவில்லை. மக்கள் பிரச்னையை சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி பிரச்சனையின் ஆழத்தை கருத்தில் கொண்டு, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது எதிர்க்கட்சியாகிய நமது தலையாய கடமை. சபாநாயகர் அரசியல் பேச முயற்சிக்கிறார்.
அங்கு அமர்ந்து அரசியல் பேசுவது முறையல்ல. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து அரசியல் பேச வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, 2020 டிச., 21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் உருவானது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அது நின்றுவிட்டது. இன்று ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வருவதற்கு காரணம் விக்கிரவாண்டி தேர்தல் தான்.
வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மத்திய அரசு அவசரமாக ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற முடிவைக் கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க. அரசு சம்பிரதாயத்திற்காக சட்டசபையை நடத்துகிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.