திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், யர்ரவாரி பாளையம் அருகே, 10-ம் வகுப்பு மாணவிக்கு, இளைஞர்கள் மயக்க மருந்து கொடுத்து, பிளேடால் சித்ரவதை செய்ததில், படுகாயம் அடைந்தார். திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமியை முன்னாள் அமைச்சர் ரோஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விவரம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கின்றன.கூட்டணி ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளை எரித்தல், தாக்குதல், பலாத்காரம் என 110 சம்பவங்கள் நடந்துள்ளன.
சரியாக வேலை செய்யவில்லை என உள்துறை அமைச்சர் பவன் கல்யாண் கூறுகிறார். உள்துறை அமைச்சராக இருக்கும் அவரை டம்மியாக வைத்துக்கொண்டு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை அவர் மீது சுமத்துகிறார்கள். மாநிலத்தில் டிஜிபி முதல் எஸ்ஐ வரை. சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் பட்டியல் தயாரித்து நியமனம் செய்து வருகின்றனர். லோகேஷை பிடிக்காதவர்கள் ரெட் புக் என்று சொல்லி பழிவாங்குகிறார்கள்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் தானும் பணியாற்ற வேண்டும் என்று பவன் கல்யாண் கூறுகிறார். அப்படியானால், சந்திரபாபுவை யோகி ஆதித்யநாத் போல் வேலை செய்ய பவன் கல்யாண் கேட்க வேண்டும். இல்லை என்றால், யோகி ஆதித்யநாத்தை போல் பவன் கல்யாண் முதல்வராகலாம். இவ்வாறு அவர் கூறினார்.