புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைனில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்துவதற்கு தமது முழு ஆதரவை தெரிவித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இரு தலைவர்களும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் பிரதமர் மோடி உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ள நிலையில் உக்ரைன் நிலவரம் குறித்து ஜோ பைடன் கேட்டறிந்தார்.
இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மோடி, உக்ரைனில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்துவதற்கு தமது முழு ஆதரவை தெரிவித்திருப்பதாக ஜோ பைடனிடம் விளக்கியதாக தெரிவித்துள்ளார்.