நியூயார்க்: நிறுத்தி வைத்துள்ளாரா?… இந்தியாவிற்கு வருகை தரயிருந்த எலான் மஸ்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதலீட்டுத் திட்டங்களை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா தனது முதலீட்டு திட்டங்களை இந்தியாவில் நிறுத்தி வைத்துள்ளது. இந்திய அதிகாரிகளுடனான தகவல்தொடர்புகளையும் நிறுத்தியுள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வர இருந்த எலான் மஸ்க் தனது பயணத்தை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது,. எலோன் மஸ்க்கின் குழு இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்தியது.
ஏப்ரல் பிற்பகுதியில் நாட்டிற்கு திட்டமிடப்பட்ட பயணத்தை மஸ்க் ஒத்திவைத்ததை அடுத்து, அவர் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மஸ்க் தனது பயணத்தை ஒத்திவைத்த பிறகு டெஸ்லா புதுடெல்லி அதிகாரிகளை அணுகவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. டெஸ்லாவின் தற்போதைய மூலதனச் சிக்கல்களால் இந்தியாவில் புதிய முதலீடுகளை திட்டமிடவில்லை என்று அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இது, டெஸ்லா உலகளாவிய டெலிவரிகளில் அதன் இரண்டாவது காலாண்டு வீழ்ச்சியுடன் ஒத்துப்போகிறது.