தர்மபுரி: தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்த கே.வி. மஹாலில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டத்தில் கலந்து கொண்டார். மாநிலக்குழுத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கிழக்கு மாவட்டச் செயலாளர் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் சங்கர் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினர்.
நகரச் செயலாளர் சுரேஷ் வரவேற்றார். விஜய பிரபாகரன், மாநிலப் பொருளாளர் சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், செந்தில்குமார், சுபா ரவி, துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், சந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக, பொதுச் செயலாளர் பிரேமலதா, ஜோதி ஆகியோர் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.

அடுத்து நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக டாக்டர் இளங்கேகவன், பொருளாளராக சுதீஷ், தலைமை அலுவலகச் செயலாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரச்சாரச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைச் செயலாளர்களாக பன்னீர்செல்வம், சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் செந்தில்குமார், சுப்பரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய நிர்வாகிகளுக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.