சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய கல்விக் கொள்கைகளில் ஒன்றான அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது வீண் வதந்தி என்றாலும், உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.