புதுடில்லி: பிரதமர் மோடி ஆலோசனை… நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஜூலை 23-ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வரும் நிதியாண்டில் நாடு செல்ல வேண்டிய பொருளாதார பாதையை வடிவமைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.