சென்னை: இருநாட்கள் பயணமாக இன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து இரவு விமானத்தில் சென்னை வரும் அவர், ஆளுநர் மாளிகையில் இரவில் தங்குகிறார். நாளை காலையில் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 2700 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேச உள்ளார்.
புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மதுரைக்கு செல்ல உள்ளார். மதுரையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 4400 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேச உள்ளார்.
இதன் பின்னர் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் பேச உள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கும் சென்று பிரதமர் தரிசனம் செய்ய உள்ளார்.