அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி 2024 ஜூன் மாதம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தனக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்ததாக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு இபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியது.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே. இளந்திரையன் மனுவை விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். நீதிபதி கே.சி., பழனிசாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.