புதுடில்லி: பாஜக செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பூத் கமிட்டி கூட்டம் நாளை (ஏப். 13) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.