தஞ்சாவூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக பேராவூரணி மத்திய ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில், ஊராட்சியில் பணிபுரியும் 8 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, ஆடைகள் வழங்கப்பட்டது.
அதேபோல், வாடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 38 மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, பரிட்சை அட்டை, ஜாமென்ட்ரி பாக்ஸ், நோட், பென்சில். பேனா என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கோ.இளங்கோ, க.அன்பழகன், எஸ்.ஞானப்பிரகாசம், ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.