புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். இவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கான தகவல் வெளியாகவில்லை.
பாஜக-வை சேர்ந்த சாய் சரவணகுமார் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் கடிதம் வழங்கினார்.
இதையடுத்து காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.