புதுடில்லி: இந்திய ொருளாதாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு தகுதி இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உற்பத்தித் துறையில் வளர்ச்சி வீதம் குறைந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்திய பொருளாதாரம் குறித்து பேச ராகுலுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்த அவர்கள் தவறி விட்டார்கள்.
உங்கள் ஆட்சியின் பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என பதிலடி கொடுத்துள்ளார்.