டெல்லி: நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பையும் தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைமையிலான நிலைக்குழுக்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல பரிந்துரைகளை அளித்துள்ளன. சரஞ்சித் சிங் சன்னி தலைமையிலான விவசாயக் குழு, பயிர் எச்சங்களை சேகரிப்பதற்கு கூடுதல் இழப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதங்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான முக்கிய பாதுகாப்புகளுக்கு பரிந்துரைத்தது.

காங்கிரஸ் எம்பி சப்தகிரி உலக மக்களவையில் ஊரக வளர்ச்சிக் குழு மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் பேசினார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான கமிட்டி, கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், வினாத்தாள் கசிவைத் தடுக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான வெளியுறவுத்துறை கமிட்டி, வெளிநாட்டில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பின் அவசியம் குறித்து, சபையில் பேசியது. மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே. எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராட ஒவ்வொரு ஜனநாயக பொறிமுறையையும் தொடர்ந்து பயன்படுத்துவோம். “