புதுடெல்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ்-தள குறித்து கூறியதாவது:- இந்திய இளைஞர்கள் போதைக்கு பலியாகி வருகின்றனர். இந்தியாவில் 2.3 கோடி ஓபியாய்டு அடிமைகளும், 1 கோடி போதைக்கு அடிமையானவர்களும் உள்ளனர். இது ஹரியானாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்.

ஒரு தலைமுறையையே அழித்துவிடும் அபாயகரமான இந்த நெருக்கடியை எதிர்கொள்ள மோடி அரசு விரும்பவில்லை அல்லது இயலவில்லை. போதைப்பொருளை நோக்கி இளைஞர்களை தள்ளும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.