புதுடில்லி: 10 ஆண்டுகளுக்கு பின்னர் பங்கேற்றார்… டெல்லி செங்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 15) நடந்த 78-வது சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்றார்.
2014 முதல் 2024 வரை எதிர்கட்சி தலைவர் பதவியை யாரும் வகிக்கவில்லை. ஏனென்றால், எதிர்கட்சிகள் யாருக்கும் தேவையான அளவு எம்.பி.க்கள் இல்லை. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.
இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் சுதந்திர தினவிழாவில் எதிர்கட்சி தலைவராக பதவியேற்றுள்ள ராகுல்காந்தி பங்கேற்றார்.