திண்டிவனம்: வன்னியர் சங்கம் சார்பில் மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை பௌர்ணமி இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் அருள், சிவக்குமார் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:-

சமுதாய தலைவர்கள் பட்டியல் மாநாடு நடத்தினால், பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பர். தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளன. அவர்களுக்கு இந்த மாநாடு கோட்டையாக இருக்கும். எனவே, 364 சமுதாய மக்களை அழைக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டை நடத்த அரசும், காவல்துறையும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.