சென்னை: நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகி காளியம்மாள் குறித்து உலா வரும் வதந்திகள்தான் அரசியல் அரங்கில் பேசும் பொருளாக உள்ளது_
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியானது. இதில் இருந்து, அக்கட்சி மீது காளியம்மாள் அதிருப்தியில் இருக்கிறார்.
இதை பயன்படுத்திக் கொள்ள, தவெக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்த நிலையில், காளியம்மாள் இதுவரை நாதகவில் இருந்து விலகவில்லை. இதற்கு, அவர் வைத்த நிபந்தனையை யாரும் ஏற்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று காளியம்மாள் குறித்து உலா வதந்திகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.