”பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் இந்தியர்களுக்கு நல்லது நடந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இதைச் சொல்கிறேன்.” என சமீபத்தில் சசி தரூர் கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”இடதுசாரி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், கேரளா வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை உணர்ந்த சசி தரூர், ”காங்கிரஸ் கட்சி என்னை வைத்துக் கொள்ள விரும்பினால், வைத்துக் கொள்ளட்டும். இல்லையென்றால், எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. உலகமெங்கும் பேச அழைப்பு வருகிறது.”
பிரச்னையின் தீவிரத்தை யோசிக்காமல், உடனடியாக கட்சி மாறப் போகிறார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஒரு கட்சியை சேர்ந்தவர் இன்னொரு கட்சியை புகழ்ந்து பேசினால், அது ‘கட்சி தாவல்‘ மட்டும் தான் நினைவுக்கு வருமா? வழமையான அரசியலில் இருந்து யாராவது ஒதுங்கினால் அது கட்சிக்கு செய்யும் துரோகமா? அப்போது மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து சிரித்து மகிழ்ந்த ராகுல் காந்தியை என்னவென்று சொல்வது? பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இங்கு நினைவுக்கு வருகிறார். அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார்.
அவருடைய பேச்சில் உறுதியும் கண்ணியமும் இருந்தது. அந்த ஒழுக்கத்தை அவர் ஒருபோதும் மீறவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் திறமையான தலைவர்கள் தேவை என்பதை காங்கிரஸ் உணர்ந்தால் யாரையும் இழக்காது. கொள்கைகள் எதுவாக இருந்தாலும், பார்லிமென்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லை தாண்டி மோதிக்கொண்டாலும், வெளியில் சந்திக்கும் போது சகஜமாக நடந்து கொள்கின்றனர். வட மாநிலங்களில் ஆரம்பத்திலிருந்தே இதுதான் நடைமுறை. இரு தரப்பினரும் வீட்டு விழாக்களில் பங்கேற்கின்றனர்.
இதுபோன்ற திட்டங்களை ஏற்றுக்கொள்பவர்கள், கருத்துக்களை மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும். அரசியலில் ஆரோக்கியமான சூழலுக்கு, சசி தரூர் போன்ற பலர் வெளிப்படையான கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் நாகரீகமும் முதிர்ச்சியும் தெரியும். அதுவரை அனைவரும் பயணித்து வந்த பாதையை விட்டு ஒருவர் சரியான பாதையில் சென்றால் அது வேறுவிதமாக இருக்கும்.