சென்னை: திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது சகோதரர் விஜய் கரூர் வருவதால் இந்த சந்திப்பு வருகிறது. அவரது வருகையே இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம். கரூர் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்திருந்தால், அது முடிந்திருக்கும்.
கரூர் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வதில் சிக்கல் எழுகிறது. இந்த சம்பவத்திற்கு அரசாங்கமும் விஜய்யும் பொறுப்பு. அவர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதைப் பார்க்கும்போது, அது மரணங்களை விட கொடூரமானது.

கரூர் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன், காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் தனது உரையைத் தொடங்குகிறார். ஆனால் இறப்புகளுக்குப் பிறகு, அவர்களைக் குறை கூறுகிறார்.
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக எப்படியோ முயற்சிக்கிறது. தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றுதான் என்று விஜய் சொன்னது கொடுமை. இவை இரண்டும் வேறு. இவ்வாறு சீமான் கூறினார்.