சென்னை : நடிகை விஜயலட்சுமி வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு மீது, சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது.
தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, 2011ஆம் ஆண்டு சீமான் மீது போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
இந்த புகார் மீதான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.