ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட நாதகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நாதக பிரச்சார கூட்டத்தின்போது, தேர்தல் விதிகளை மீறியதாக பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.