சென்னை : தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கும் வரியை தரமாட்டோம் என்று கூற நொடி பொழுதுபோதும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கும் வரியை தரமாட்டோம் எனக்கூற, எங்களுக்கு ஒரு நொடி போதும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம் எனக் குறிப்பிட்ட அவர், அதைக்கூட புரிந்து கொள்ளாதவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பது இந்தியாவுக்கே சாபக்கேடு என விமர்சித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் அதற்கான நிதி கிடையாது என சமீபத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.