சென்னை: தமிழக வெற்றிக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4-ம் தேதி சென்னை பனையூரில் விஜய் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை, 04.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், நமது வெற்றிக் கட்சியின் நிகழ்வுகள் மற்றும் தொடர் பொதுக் கூட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, கட்சி விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல செயலாளர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் இணைந்த அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தலைவரின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.”