கர்நாடகா: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் மீதான போக்சோ வழக்கில் சம்மன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பா உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் எடியூரப்பா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், 4 பேரும் ஆஜராகும் சம்மனை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வருக்கு எதிரான சம்மன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.