சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி அனைத்து இந்திய மாநிலங்களின் உரிமைக்கு கிடைத்த வெற்றி என்று கனிமொழி எம்.பி. எக்ஸ் இணையதளத்தில் அவர் மேலும் கூறியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைத்த ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த வெற்றி தமிழகம் மட்டுமின்றி அனைத்து இந்திய மாநில உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.