மெயின்புரி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்தது. இதற்காக, தொகுதி பங்கீடு குறித்து, கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கர்ஹல் தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாகும். இந்தத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை கர்ஹால் மக்கள் தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பிரதாப் சிங்யாதவ் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.