சென்னை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஒரு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வது சுலபம் கிடையாது” என்றார்.