சென்னை: தெலங்கானாவில் உள்ள சத்யா திரையரங்கில் புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. அதே சமயம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. ஒரு இடத்தில் தேவைக்கு அதிகமாக கூட்டம் கூடும் பட்சத்தில் போலீசார் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்.
நடிகர் அல்லு அர்ஜுன், சம்பவம் நடக்கும் வரை பார்த்துவிட்டு, பிறகு கூடிவருவது தவறான முன்னுதாரணம். அல்லு அர்ஜுன் கைது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதை. சென்னையில் விமானக் கண்காட்சியின் போது கூட்டம் அலைமோதியதுமே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
காவல் துறையின் பாதுகாப்புக் கோளாறால் 5 உயிர்கள் பலியாகின. தெலுங்கானா மாதிரியில் கைதுகள் நடந்தால் இங்கு யாரை கைது செய்திருக்க வேண்டும்? தெலுங்கானா மாதிரியும், திராவிட மாடலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.